பேஸ்புக் ஹேக் செய்யப்படாமல் இருக்க சில அறிவுரைகள் உங்கள் கவனத்திற்கு!

பேஸ்புக் ஹேக் செய்யப்படாமல் இருக்க சில அறிவுரைகள் உங்கள் கவனத்திற்கு!


உண்மையில் பேஸ்புக் ஹேக் செய்யப்படுவது என்பது என்னைப் பொருத்தமட்டில் கிட்டத் தட்ட சாத்தியமற்ற ஒரு செயல் என்று தான் குறிப்பிட வேண்டும்.

சிலரின் Facebook ID திருடப்பட்டு வேறொறுவரால் பயன்படுத்தப்பட்டு அல்லது Deactivate செய்யப்பட்டு இருப்பது மறுக்க முடியாத உண்மையாகும். அப்படி நடக்கக் காரணம் முற்று முழுதாக அவர்களின் அறியாமை தான் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

அதாவது போலியான Login link களின் மூலம் Facebook ஐ Login செய்தல் காரணமாக தான் அதிக அளவில் ID_கள் பறிபோகின்றது. இது Phishing Method என அழைக்கப்படும். 

விளம்பரங்களை Click செய்தவுடன் Login செய்யும்படி அறிவிப்பு வரும் அல்லது உங்களுக்கு தனியாக யாராவது ஒருவரால் Link கொடுக்கப்பட்டு அதை Click செய்தவுடன் Login செய்யும் படி அறிவிப்பு வரும்.இவ்வாறு நீங்கள் Login செய்வதன் மூலம் உங்கள் Password மற்றும் Phone Number/Email ID அந்த link உரிமையாளரை சென்றடையும்.என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மற்ற விடயம் என்னவென்றால் உங்கள் Password பலவீனமாக இருத்தலும் இதற்கான முக்கிய காரணம் என்பதை மறக்க வேண்டாம். 

அதாவது உங்கள் பெயர், தொலைபேசி இலக்கம் ,உங்கள் விரும்பத்தக்கவர்களின் பெயர், பிறந்த திகதி போன்றவற்றை Password ஆக வைத்திருப்பது நீங்களே தூண்டிலைப் போட்டுக் கொடுக்கும் செயல் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இன்னொரு விடயமும் இருக்கிறது. அதாவது குறைந்த பட்சம் உங்களது Password 10 Characters ஆக இருப்பதோடு அவை எழுத்துக்கள் இலக்கங்கள் மற்றும் Symbols கொண்டதாக இருத்தல் வேண்டும். மேலும் உங்கள் Phone Number மற்றும் Email IDயை Public இல் வைத்திருத்தலும் பாதுகாப்பற்ற செயலாகும். 

அத்துடன்  Browser Facebook இல் உங்கள் Facebook ஐ Login செய்து வைப்பதன் மூலம் உங்கள் Facebook ID இற்கு Extra Security வழங்கப்படும். எனவே நீங்கள் இந்த விடயங்களை கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் இருந்தால் உங்கள் ID Hack செய்யப்படுவது 99% சாத்தியமற்றது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

-பர்ஹாத் மனாப் ஹலீல்

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.