ஒன்றரை மாத குழந்தையை கோடரியால் வெட்டிக் கொன்ற தாய்! அனுராதபுரத்தில் கொடூரம்!

ஒன்றரை மாத குழந்தையை கோடரியால் வெட்டிக் கொன்ற தாய்! அனுராதபுரத்தில் கொடூரம்!


அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஷ்ரவஸ்திபுர பகுதியில் இளம் தாய் ஒருவர் தனது ஒன்றரை மாத குழந்தையை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது.

 

இன்று (05) பகல் வேளையில்,  பட்டதாரி ஆசிரியையான 30 வயதுடைய குறித்த தாய், தனது ஒரு மாதமும் 20 நாட்களும் நிரம்பிய குழந்தையை இவ்வாறு வெட்டிக் கொலை செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.


குழந்தையை கொலை செய்த பின்னர், குறித்த தாய், கல்னேவ பொலிஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்துள்ளதாகவும், அங்கு வைத்து அவரை பொலிசார் கைது செய்ததாகவும் அவர் மேலும் கூறினார்.


 இந் நிலையில் கொல்லப்பட்ட குழந்தையின் சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், சரணடைந்த தாய் விசாரணைகளுக்காக அனுராதபுரம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.


எம்.எப்.எம்.பஸீர்


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.