“நான் இராஜினாமா செய்கின்றேன் - மேல் முதல் கீழ் வரை அழுத்தம் செய்கின்றார்கள் -புதிதாய் நியமனம் பெறுபவருக்கும் இது தான் நடக்கும்”

“நான் இராஜினாமா செய்கின்றேன் - மேல் முதல் கீழ் வரை அழுத்தம் செய்கின்றார்கள் -புதிதாய் நியமனம் பெறுபவருக்கும் இது தான் நடக்கும்”

அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியில் இருந்து விரைவில் இராஜினாமா செய்யவுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் டாக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை இராஜினாமா செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
ச்
தான் தலைவராக இருந்த காலத்தில் மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை தமக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

எவ்வாறாயினும், அந்த விளைவு காரணமாக அல்ல, தனிப்பட்ட உடல்நலக் காரணங்களுக்காக தான் இராஜினாமா செய்வதாக அவர் கூறினார்.

எதிர்காலத்தில் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளவர் தன்னைப் போன்று பாதிக்கப்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.