பயனாளர்களின் பாதுகாப்பு குறித்து பேஸ்புக் நிறுவனத்தின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பேர்க் விளக்கமளித்துள்ளார்.
பேஸ்புக்கானது பயனாளர்களின் பாதுகாப்பை விட இலாபத்தை தான் முதன்மையாக கருதுவதாக பரவலான கருத்து உள்ளது. பேஸ்புக்கின் செயலிகள் இளைஞர்களின் மனநலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் உள்ளதாக, அதன் முன்னாள் ஊழியர் பிரான்சிஸ் ஹாகன் குற்றஞ்சாட்டினார்.
இது குறித்து விளக்கமளித்த மார்க் ஸக்கர்பேர்க் விளக்கமளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது,
விளம்பரம் மூலமாக மட்டுமே பேஸ்புக் வருமானம் ஈட்டுவதாகவும், தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு பதிவுகளையும் பேஸ்புக் பயன்படுத்துவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.