ஈஸ்டர் ஞாயிறு சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால் அவர் மீது வழக்குத் தொடர வேண்டும் என்றும் எந்த ஆதாரமும் இல்லை என்றால் விடுவிக்க வேண்டும் என்றும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில், இன்று (04) தெரிவித்தார்.
இது ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் கேள்வி அல்ல, ஆனால் பாராளுமன்ற சிறப்புரிமை பற்றிய கேள்வி என்பதால், இந்த விடயத்தில் சரியாக செயல்படவில்லை என்றால், அடுத்த முறை அனைத்து எம்.பி.க்களும் தங்கள் சிறப்புரிமைகளை இழக்கும் அபாயம் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
ஈஸ்டர் சம்பவம் தொடர்பாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அவர்கள் தங்கள் கடமைகளைப் புறக்கணித்ததாக கூற முடியாது என்றார்.