இலங்கையில் விரைவில் எரிபொருட்களின் விலையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமையல் எரிவாயு, பால்மா, சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலையேற்றத்தைத் தொடர்ந்து எரிப்பொருட்களின் விலையையும் அதிகரிக்குமாறு பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது கூட்டுத்தாபனத்திற்கு 70 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ள காரணத்தினாலேயே இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், எதிர்வரும் நாட்களில் எரிப்பொருட்களின் விலையும் உயர்வடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், கோதுமை மா விலை அதிகரிப்பை அடுத்து பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.