பாடகி யொஹானிக்கு கிடைக்கவிருப்பது இது தான்!

பாடகி யொஹானிக்கு கிடைக்கவிருப்பது இது தான்!

உலகப் புகழ்பெற்ற இலங்கையின் பாடகி யொஹானி டி சில்வாவுக்கு அரசு விருது வழங்ப்படுமென தேசிய பாரம்பரியம் மற்றும் கலை இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நேற்று (04) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் (UPFA) நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கேட்ட வாய்வழி மூல கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுவரை இலங்கைக்கு சர்வதேச புகழைக் கொண்டுவந்த பாடகி யொஹானி டி சில்வாவுக்கு அரசாங்கம் எந்த விருதையும், மரியாதையையும் வழங்கவில்லையா என்று ஹேஷா விதானகே கேட்டார்.

இது தொடர்பில் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, நிச்சயமாக, அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன.. இந்த கலைஞருக்கு அரச விருது வழங்கி கௌரவிக்கப்படும்.

நம் நாட்டில் கலை தொடர்பான படைப்புகளைப் பாதுகாக்க எந்த ஏற்பாடும் இல்லை. நாங்கள் இப்போது அதைப் பாதுகாக்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளோம். கலைஞர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாக்கும் ஒரு திட்டத்தை நாம் செயல்படுத்த வேண்டும்.இந்த கலைஞர்களும் அத்தகைய திட்டத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும்.

வாழ்நாளில் ஒருமுறை மட்டும் மரியாதை மற்றும் கண்ணியத்துடன் அந்தக் கலைகளில் ஈடுபட வாய்ப்பு இருக்க வேண்டும். அந்த மரியாதை யொகானிக்கும் வழங்கப்படுகிறது. அந்த பெருமையை மற்ற கலைஞர்களுக்கும் ஏற்படுத்துவோம் எனத் தெரிவித்தார்.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.