எங்கள் மக்கள் சக்தி கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அத்துரெலிய ரத்ன தேரர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவ, கட்சியால் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்ததாக உறுதிப்படுத்தியுள்ளார்.
கட்சியின் மத்திய குழு அத்துரெலிய ரத்ன தேரரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசந்த கொடிதுவக்கு கூறியுள்ளார்.
கட்சியின் முடிவுகளுக்கு எதிராக செயற்படுவதாகவும் கட்சி மீது பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாகவும் தெரிவித்து கட்சியின் ஒழுக்காற்று குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதேவேளை நாடாளுமன்றத்தில் அத்துரெலிய ரத்ன தேரருக்கு பதிலாக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.