மாகாணங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து சேவைகளை இம்மாதம் 21ஆம் திகதி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளதால் இவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது வரை, மாகாணங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில், ரயில்கள் இயக்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.
அதன்படி, பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் ரயில் சேவைகள் இம்மாதம் 21ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.