இலங்கையில் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம்! பேருவளை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரின் புதிய புத்தாக்க முயற்சி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம்! பேருவளை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரின் புதிய புத்தாக்க முயற்சி!


இளைஞர்களுக்கான இளைஞர்களின் வார்த்தைகளை மதிக்கும் young කතා நிகழ்வு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் திரு. தமித விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் சென்ற வாரம் ஒக்டோபர் 11ஆம் திகதி களுத்துறை பிரதேச காரியாலயத்தில் இடம்பெற்றது. இத் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமானது, 1960களில் உ௫வாக்கப்பட்ட அமைப்பாகும். இம் மன்றமானது, விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் ஓர் அமைப்பாக செயற்பட்டு வ௫கின்றது. இந்நிகழ்வில்  மாவட்ட கூட்டமைப்பு உறுப்பினர்கள், மற்றும் இளைஞர் பாராளுமன்றத்தின் ஒவ்வொ௫ பிரதேசத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தவர்களும் கலந்துக் கொண்டு  தமது கருத்துக்களை தலைவரிடம் சுதந்திரமாக பகிர்ந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் களுத்துறை மாவட்ட இளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகார மற்றும் இராஜதந்திர உறவுகளின் பிரதி அமைச்சர் திரு. அஹ்மத் சாதிக் அவர்களால் புதிய திட்டம் குறித்து தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவருடன் கலந்துரையாடப்பட்டது. இதன்போது ஏனைய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது கருத்துக்களை முன் மொழிந்தனர்.


இங்கு திரு. அஹ்மத் சாதிக் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், மாதிரி ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கம் தொடர்பிலேயே முக்கியமாக கலந்துரையாடினார்.


அத்தோடு இத்திட்டம் இளைஞர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்பான ஒரு அனுபவத்தினை வழங்குவதற்காகவே உருவாக்கப்படுகின்றதாகவும், ஏனைய நாடுகளில் மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கம்,வளர்ச்சி மற்றும் தொழிற்பாடு என்பன சிறப்பாக நடைபெற்று வந்தாலும், இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் அனுபவம் குறைவானதாகவே காணப்படுகிறது. அத்தோடு  வெளிவிவகாரம் தொடர்பாக இலங்கை வாழ் இளைஞர்கள் போதியளவு தெளிவு இல்லாமல் இருக்கின்றனர். அந்த வகையில் சர்வதேச தொடர்புகளை உருவாக்கிக் கொள்வது இன்றியமையாத தேவையாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.


மேலும் அவர் குறிப்பிடுகையில், வெளிவிவகாரம் தொடர்பான மிக முக்கியமான தெளிவும்,கவனமும் இலங்கை வாழ் இளைஞர்களுக்கு தேவைப்படுகிறது. வெளிவிவகாரம் என்பது ஒரு தனி நபரின் வாழ்வில் எந்தவொரு இடத்திலும் ஆரம்பம் முதல் இறுதிவரை முக்கிய பங்களிக்கின்றது. வியாபாரம், கல்வி, விளையாட்டு என சர்வதேச உறவுகளை மேம்படுத்தல் என்பன குறிப்பிடத்தக்க விடயங்களாகும். அந்த வகையில் இலங்கையில் குறிப்பிட்ட சில மாதிரி ஐக்கிய நாடுகள் சபை  காணப்பட்டாலும் அவை தொடர்ந்து செயற்படுத்தப்படுவதில் குறைபாடுகள் காணப்படுதல் என்பது கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறான விடயங்கள் அரசுக்குக் கீழ்  சிறப்பாக இடம்பெற வேண்டுமென்பதை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயமாகும் எனவும் அவர் தனது கருத்தை வெளியிட்டார்.


ஆகவே, களுத்துறை மாவட்ட இளைஞர் கழக உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் இவர்களை கொண்டு  களுத்துறை மாதிரி ஐக்கிய நாடுகள் சபை  நிறுவப்படவேண்டும், இளைஞர்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவிவகாரம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும், சர்வதேச துறையில் நம் நாட்டு இளைஞர்களுக்கும் வாய்ப்புகள் பெற்று தரவேண்டும்  எனவும் குறிப்பிட்டிருந்தார்.


மேலும்,தேசிய இளைஞர் மன்றத்தின் கீழ் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை ஒன்றினை உருவாக்க மிக விரைவாக முன்மொழிவு ஒன்றை வழங்க இருப்பதாகவும், முக்கியமாக பேருவளை பிரதேசத்தில் மாதிரி ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


 இந்த செயற்திட்ட நடவடிக்கைகளுக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சும்  உறுதுணையாக இருந்து உதவி வழங்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.


 இந்த விடயம் தலைவர் திரு தமித விக்ரமசிங்க முன்னிலையில் முன்வைக்கப்பட்ட போது இம்மாதிரியான புது முன்மொழிவுகளை வரவேற்பதாகவும், செயற்றிட்ட நடவடிக்கைளுக்கு எதிர்காலங்களில் ஆதரவினை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.


மேலும், களுத்துறை மாவட்டத்தின் உதவிப் பனிப்பாளர் திரு. ஜயதிலக அவர்களும் உறுதுணையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு களுத்துறை பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட இந்நிகழ்வில் களுத்துறை பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முப்தி மற்றும் புலத் சிங்கள இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு கலிந்து,ஹொரன இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ரஷ்மிகா மற்றும் பண்டாரகம இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு. வெனுர சித்ரபானு அவர்களும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


-அஹ்மத் சாதிக்

B.B.M Special in Accountancy - UOK,

CIM - UK (R)

Deputy Minister of External Affairs and Diplomatic Relations -Youth Parliament 

Former President of All University Muslim Student's Association.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.