இன்று ஆரம்பமான கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய ரோஹித!!

இன்று ஆரம்பமான கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய ரோஹித!!


ஸ்ரீலங்கா கிரிக்கெட்டினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 50 ஓவர்கள் கொண்ட கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் இன்று (27) ஆரம்பமாகின. 

அதற்கமைய, குறித்த போட்டியின் முதல் சுற்றுக்கான போட்டிகள் நவம்பர் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளன.

இன்றைய தினம் சில போட்டிகள் நடைபெறுவதுடன், அதில் களுத்துறை மாநகர விளையாட்டு கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமரின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷவும் பங்குபற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

களுத்துறை மாநகர விளையாட்டுக் கழகம் மற்றும் கடற்படை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 50 ஓவர்கள் கொண்ட இந்தப் போட்டி வெலிசரை கடற்படை  மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.