நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் முதல் தொகுதி இலங்கை வந்தடைந்தது!

நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் முதல் தொகுதி இலங்கை வந்தடைந்தது!

நனோ நைட்ரஜன் திரவ உரத்தின் முதல் தொகுதி நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதற்கமைய ஒரு இலட்சம் லீட்டர் நனோ நைட்ரஜன் திரவ உரம் இந்தியாவிலிருந்து விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனை கமநல சேவை மையங்களினூடாக இன்றைய தினம் முதல் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம், மிகுதி 31 இலட்சம் லீற்றர் நனோ நைட்ரஜன் திரவ உரம் எதிர்வரும் நாட்களில் நாட்டிற்குக் கொண்டுவரப்படவுள்ளது.

நனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய விஷேட திரவ உரத்தினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

9 இலட்சம் ஹெக்டேயருக்கு தேவையான திரவு உரத்தை கொள்வனவு செய்வதற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, நைட்ரஜன் மூலத்துடன் கூடிய 3.1 மில்லியன் லீட்டர் விஷேட திரவ உரத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் அதன் முதல் தொகுதியாக 1 இலட்சம் லீட்டர் விஷேட திரவ உரம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.