நாட்டில் மேலுமொரு தீவிரவாத தாக்குதல் - தப்பிய ஞானசார தேரர்!

நாட்டில் மேலுமொரு தீவிரவாத தாக்குதல் - தப்பிய ஞானசார தேரர்!

நாட்டில் எந்த நேரத்திலும் மற்றுமொரு தாக்குதல் நடைபெறலாம் என எச்சரிக்கை விடுத்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் விசாரணை நடத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் காவல்துறையினர் அவரிடம் மேலதிக தகவல்களை பெறுவார்கள் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அகத் அல்விஸ் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போது நாட்டி மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிவித்திருந்தார்.

இது அரசியலில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்தது.

இதனை விசாரிக்க வேண்டும் என பலதரப்பட்ட எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அத்துடன் இது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலும் சிறிலங்கா காவல்துறைமா அதிபர் திணைக்களத்திலும் முறைப்பாடு அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.