வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் மேலும் 04 சதொச அதிகாரிகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.
கொள்வனவு தொடர்பான உதவி மேலாளர், சிரேஷ்ட விநியோக முகாமையாளர், விநியோக முகாமையாளர் மற்றும் வெலிசர மொத்த விற்பனை முகாமையாளர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலங்களை வழங்குவதற்காக சந்தேகநபர்கள் நேற்று (11) வந்திருந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று வெலிசர நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.