இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆய்வுகளில் மன்னார் வளைகுடாவில் மாத்திரம் 280 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எரிவாயு மற்றும் கனிய எண்ணெய் வளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக என வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார்.
இலங்கையின் அரச மற்றும் அரச நிறுவனங்களுடன் சேர்த்து மொத்த கடனாக 47 பில்லியன் அமெரிக்க டொலர்கள் போன்றதொரு தொகையே உள்ள நிலையில் மன்னார் வளைகுடாவில் மாத்திரம் 280 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வளங்களை வைத்துக்கொண்டு தடுமாறிக் கொண்டிருக்கிருக்கின்றோம் என வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இவ்வாறான தேசிய வளத்தை பயன்படுத்தும் வேலைத்திட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினரின் பூரண ஒத்துழைப்புகளை வழங்குமாறும் அவர் அழைப்புவிடுத்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (06) பெற்றோலிய வளங்கள் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
-வீரகேசரி