முதலாவது T20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முதலாவது T20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி!!


இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது T20 கிரிக்கெட் போட்டியில் 28 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா அணி வெற்றிப் பெற்றுள்ளது.


போட்டியில் தென்னாபிரிக்கா அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.


அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களைப் பெற்றது.


தென்னாபிரிக்கா அணி சார்பில் ஏடன் மார்க்ரம் அதிகபட்சமாக 48 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.


பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.


பதிலுக்கு 164 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.


அதன்படி, தென்னாபிரிக்கா அணி 28 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.


இலங்கை அணி சார்பில் தினேஷ் சந்திமால் அதிகபட்சமாக 66 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.