மத்திய வங்கி ஆளுநர் இராஜினாமா!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மத்திய வங்கி ஆளுநர் இராஜினாமா!!


மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யூ டி லக்ஷ்மன், டிசம்பர் 14ஆம் திகதியன்று தனது இராஜினாமா கடிதத்தை கையளிக்கவுள்ளார்.


பேராசிரியர் டபிள்யு. டி. லக்ஷ்மன் 2019 டிசம்பர் 24ஆம் திகதி அன்று தனது புதிய பதவியின் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.


அவரது நியமனமானது 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயவிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின்   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வினால் செய்யப்பட்டது. இதற்கிணங்க, பேராசிரியர் லக்ஷ்மன் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் தலைவராகவும் தொழிற்பட்டார்.


பேராசிரியர் லக்ஷ்மன் நன்கறியப்பட்ட பொருளியலாளர் ஆவார். இவர் 1994 இலிருந்து 1999 வரையான காலப்பகுதியில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பணியாற்றினார். 2005இல் கல்வியல் துறையில் அவர் ஆற்றிய பணிக்காக தேசமான்ய விருது அவருக்கு வழங்கப்பட்டது. 


பேராசிரியர் லக்ஷ்மன் இலங்கை மத்திய வங்கியின் 15 ஆவது ஆளுநராவார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.