உயர்தர வகுப்புகளுக்கு உள்வாங்கப்பட தேவையான ஆகக்குறைந்த தகுதிகளை உள்ளடக்கிய விசேட சுற்றிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உயர்தர வகுப்புகளுக்கு உள்வாங்கப்பட தேவையான ஆகக்குறைந்த தகுதிகளை உள்ளடக்கிய விசேட சுற்றிக்கை!


2020 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் அழகியல் பாடநெறி பரீட்சைக்காக தோற்றிய மாணவர்கள் உயர்தர வகுப்பில் உள்வாங்குவதற்கு தேவையான ஆகக்குறைந்த தகுதிகளை உள்ளடக்கிய விசேட சுற்றிக்கையை வெளியிட கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இன்று (24) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதுதொடர்பாக தெரிவிக்கையில், 

அழகியல் பாடநெறி பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் ஏனைய பாடங்களில் இரண்டு திறமை சித்தி அடங்களாக 05 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் மற்றும் திறன் ஆற்றல் படி நிலை 01தொடக்கம் 04 வரையிருக்குமாயின் அழகியல் பாடநெறி பரீட்சை பெறுபேறு வெளிவரும் வரையில் இந்த மாணவர்களுக்கு உயர்தர வகுப்பில் பிரவேசிக்க முடியும் என்றார்.

இதற்கமைவாக அழகியல் பாடநெறிக்கான பெறுபேறு வெளியிடுவதில் நிலவும் தாமதத்தின் காரணமாக மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் கூறினார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.