மாணவர்களுக்கான தடுப்பூசி தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்தவை!

மாணவர்களுக்கான தடுப்பூசி தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்தவை!


மருத்துவ அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குவதற்கான இயலுமையுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (03) நடைபெற்ற கொரோனா ஒழிப்பு விசேட குழுவின் கூட்டத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தடுப்பூசியேற்றும் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதில் 20 முதல் 29 வயதிற்கு இடைப்பட்ட பிரிவினருக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கையை அடுத்த 02 வாரங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.