முஸ்லிம் சமூகத்திற்கு முஸ்லிம் நீதியமைச்சரிடம் நீதி கிடைக்குமா? சிந்திக்க வேண்டிய தருணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம் சமூகத்திற்கு முஸ்லிம் நீதியமைச்சரிடம் நீதி கிடைக்குமா? சிந்திக்க வேண்டிய தருணம்!


முஸ்லிம்கள் சார்பாக குரல் கொடுப்பேன் எனவும், தானும் ஒரு முஸ்லிம் என முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நீதி அமைச்சர், சமூகத்துக்கு  தன்னால் ஆகவேண்டிய பொறுப்பையும் சமூகத்திற்கு பாதுகாப்பையும் வழங்குகிறாரா?

சிந்திக்க வேண்டிய தருணம்...

காதி நீதிமன்ற சட்டத்திருத்தம் என்னும் பெயரில், முஸ்லிம்களின் தனியுரிமையை பறிக்க முயற்சிக்கிறார். யார் எதிர்த்தாலும் தான் சார்ந்திருக்கும் அரசியல் கட்சியின் ஒரே நாடு ஒரே சட்டம் கொள்கையை நிறைவேற்ற தயங்கப் போவதில்லை என்ன முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்கு சவால் விடுகிறார். இதற்காக குர்ஆன் சட்டத்திலும் கையை வைக்க முயற்சிக்கிறார்.

ஏவி விடப்பட்டுள்ள மத குரு, நாம் வணங்கும் அல்லாவை நிந்திக்கும் போதும், படைத்த ரப்பு சம்பந்தமாக மோசமான வார்த்தைகளையும், ஆத்திரமூட்டும் விஷத்தையும் கக்கும்போது, தனக்கு சுமத்தப்பட்டுள்ள பொறுப்பிலிருந்து விலகி இருக்கின்றார். மத குரு மீண்டும் மீண்டும் முஸ்லிம்களை ஆத்திரமூட்டும் வகையில் நடந்து கொண்டாலும், ஒரு முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும் இவர், முஸ்லிம் மீது பொறுப்புள்ள இவர், இதற்கான சட்ட நடவடிக்கைக்கு எந்தவிதமான கரிசனையும் கொள்ளவில்லை. 

ஆனால் பரிக்கப்பட போகும் முஸ்லிம் தனியார் சட்டம் சம்பந்தமாக பேசும்போது தான் முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறை கொண்டுள்ளதாகவும் கூறிக்கொள்கிறார்.

நாட்டில் இனங்களுக்கிடையிலான ஆத்திரமூட்டும் செயல்களையும், இன ஒற்றுமைக்கு பதமாக அமையும் கருத்துக்களையும்  வெளியிடுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க, போதிய அளவு சட்டங்கள் இருந்தபோதிலும், இது பற்றி கண்டும் காணாதது போல் இருக்கின்றார்.  

இந்த மத குரு பற்றியும் இவரது  நடவடிக்கைகள் பற்றியும், இவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு பின்னணிகளை நோக்கும் போது, இவரது பின்னணிகள் யார் என்பது பற்றியும், மக்கள் பல்வேறுபட்ட சந்தேகங்களை ஊடகங்கள் மூலமாக எழுப்பிய போதிலும், இது சம்பந்தமாக எந்தவித நடவடிக்கைகளுக்கும் இவர் முற்படுவதாக தெரியவில்லை. எவ்வாறாயினும்  குறைந்தபட்சம் இம் மத குருவின் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு எந்தவித முயற்சிகளும்  எடுப்பதாகவும் தெரியவில்லை.

தான் பதவி வகிக்கும் அரசு ஆட்சியில் இருக்கும்போதும் , அரசாங்கமானது  இதை கண்டு கொள்ளாத இருப்பது மக்கள் மத்தியில் பாரி சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்  இவ் அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகிக்கும்  இவரும் மௌனமாக இருப்பதில் கவலை கொள்ள வேண்டியுள்ளது.

சென்ற வாரம் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உருப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளையில்  கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது, பொலீஸ் பாதுகாப்பு துறைக்கு பொறுப்பான அமைச்சர்   சர்ச்சைக்குரிய  அறிக்கையொன்றை  ஒன்றை முன்வைத்தார்.

அதாவது முஸ்லிம்கள் ISIS சிந்தனையுடையவர்கள் என்றும், அதனால் எந்த வேலையிலும் எங்கும் ஏதும் நடக்கலாம் என்றும், முஜீபுர்ரஹ்மான் ஒரு முஸ்லிமாக இருப்பதால் அந்த சிந்தனை அவரிடமும் இருக்கலாம் என்றும் குறிப்பிட்டார். இந்த விடயத்தில் குறிப்பிட்ட மதகுருவுக்கு தான் நன்றிகளை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதில் சிந்திக்க வேண்டிய விடயம்,  முஸ்லிம்கள் சம்பந்தமாக பதிலளிக்க வேண்டிய பொறுப்பு வாய்ந்த அமைச்சர், எமது நீதி அமைச்சர் அவர்களே. பொலீஸ் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டதை பார்க்கும் போது, தற்போது நாட்டின் நீதி அமைச்சரும் ஒரு முஸ்லிமான முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஒருவரே என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

பாராளுமன்றத்தில் தன் ஆசனத்திற்கு அடுத்ததாக ஆசனம் அமையப் பெற்றுள்ள போலீஸ் பாதுகாப்பு அமைச்சர், இவ்வாறு கூறும்போது  இவர் பக்கத்திலே அமர்ந்திருந்தார். இதற்கு எந்தவிதமான மறுப்பும் தெரிவித்து தன் கருத்தை முஸ்லிம்களுக்காகவும் சமுதாயத்திற்காகவும் வெளியிடவில்லை  இல்லை. காரணம் என்ன?

பாராளுமன்றத்தில் சபாநாயகரின் அனுமதியுடன் உடனடியாக  இவருக்கு இதை எதிர்த்து கருத்துத் தெரிவிக்க வாய்ப்பு இருந்தும், இவர்  மௌனமாக இருந்தார். குறைந்தபட்சம் அடுத்த நாள் கூட பாராளுமன்றத்தில் இதற்காக நேரத்தை ஒதுக்கி இதற்கான பதிலாவது அளித்திருக்கலாம். அதுவும் நடைபெறவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர்  சாணக்கியன் அவர்கள் "உங்களுடைய கடவுள் குண்டு வைப்பின் சூத்திரதாரி ஏன் வாயை கூறும் போதும் ஏன் வாயை மூடிக்கொண்டு இருக்கின்றீர்கள்" என் எனக் கேள்வி எழுப்பிய பிரகும் அந்த சபையில் மெளனமான இருந்து, தான் ஓரு முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வது வியப்பாகவே உள்ளது.

ஒரு முஸ்லிம் என்ற வகையில் பக்கத்தில்  இருந்த இவர், எந்த வகையில் இவர்  எந்த வகையில் சகித்துக் கொண்டிருந்தார் என்பது ஒரு புரியாத விடயமாகவே  உள்ளது.

இவ்வாறான விடயங்கள் முஸ்லிம் மக்களின் மனதை எவ்வளவு தூரம் புண்படுத்தும் என்பதையும். இவ்வாறான செயல்களால் மக்களை ஆத்திரமூட்டி இவர் என்ன பின் விளைவை எதிர்பார்க்கின்றார் என்பதை  கிரகித்து, இதை நிறுத்தி, முஸ்லிம் சமூகத்தை இவர் தள்ளத் துடிக்கும் பாதாளத்தில் இருந்து காப்பாற்றும் அளவுக்கு எமது முஸ்லிம் நீதி அமைச்சரின் சிந்தனையில், கவனத்தில் கொள்ளாதிருப்பது இந்த நாட்டு முஸ்லிம்களின் துரதிருஷ்டவசமே. 

கடந்த சில வாரங்களுக்கு முன் ஒருவர் முஸ்லீம் பெண்கள் சம்மந்தமாக  வெளியிட்ட கருத்து மிகவும் பாரதூரமானது.

அதாவது முஸ்லிம் பெண்கள் 80 வீதமானோர் விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் என்றும், அவர்கள் தங்களது அபாயா வுக்குள் போதைப் பொருட்கள்  கடத்துவதாகவும், மிக மோசமான வகையிலான கருத்துக்களை வெளியிட்டார். இதை ஒரு தடவை அல்ல. அவர் பல தடவைகள் இந்த கருத்தை வெளியிட்டார். 

இவர் அவதூறு கூறியது, 80% வீதமும் இலங்கையில் உள்ள எங்களது  தாய்மார்கள், சகோதர சகோதரிகள், இன்று பாராளுமன்றத்தில் உள்ள அத்தனை உறுப்பினர்களின் தாய் மற்றும் சகோதரிகள் உற்பட தான் என்பது எவர் சிந்தனையிலும் வராதது ஒரு கேவலமே .

இந்த நிலையிலும் கூட, முஸ்லிமாக இருக்கும் நமது நிதி அமைச்சர், மௌனமாக இருப்பது  உண்மையில் வெட்கப்பட வேண்டிய விடயமாகும். ஒரு முஸ்லீம் நீதி அமைச்சர் இந்த நாட்டில் பதவி வகிக்கின்றார் என்பதிலும், தான் ஒரு முஸ்லிமாக இருந்த நிலையில், அதிலும் நிதியமைச்சராக  இருக்கும்  நிலையில், தன்னால் இதற்கான நடிகைகளை எடுக்க முடியாததையிட்டு  உண்மையில் இவர் வெட்கப்பட வேண்டும்.

தனது அமைச்சின் கீழ் உள்ள சிறைச்சாலையில் நடந்த சீரழிவிற்கு கடும் கோபத்தையும் கண்டனத்தையும் வெளியிட்ட  அமைச்சருக்கு, தானும் தான் சமூகமும் தான் வணக்கும் இறைவனும் நிந்திக்கப்படும் போது ஏன் கோபம் வரவில்லை.

பாராளுமன்றத்தில் உறுப்பினர் சானக்கியன் அவர்கள்  உரையாற்றும் போது குறுக்கீடு செய்ததினால் சாணக்கியன் அவர்களால் திட்டு தீர்க்கப்பட்ட  பாராளுமன்ற  உறுப்பினரின்  நிலை பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும்.

அதாவது குறிப்பிட்ட தேரருக்கு எதிராக  இவர்கள் ஏற்கனவே கண்டனங்கள் தெரிவித்து,  இதற்காக நடவடிக்கைகள் எடுத்திருந்தால், உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் இதுபற்றி பேச வேண்டி இருக்காது.  அத்தோடு நம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரை  சாணக்கியன் அவர்கள்  திட்டித் தீர்க்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்காது. 

ஆக இதற்கான காரணத்தையும்  முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே பொறுப்புக்கூற வேண்டும். படைத்த இறைவனை மாசு படுத்தும்போது  இதற்காக இறைவனால் வழங்கப்பட்ட ஒரு தண்டனையாக இது இருக்குமோ  என்றும் இதை நினைக்கத் தோன்றுகின்றது


எனவே தொடர்ந்தும் எமது அமைச்சர்களும் , பாராளுமன்ற உறுப்பினர்களும் தாங்களின் பதவிகக்காக இவ்வாறு மௌனம் சாதிக்கும் இடத்தில் இதைவிட கேவலங்கள் நடக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தேர்தல் காலங்களில் தான் ஒரு முஸ்லிம் என்றும், முஸ்லிம்களுக்கு எதிராக  அநியாயங்களும் , அசாதாரணமான நடவடிக்கைகளும்  எடுக்க விடமாட்டேன், என்ன சூளுரைத்த இவர், முஸ்லிம்களுக்கு எதிரான இவ்வாறான அநியாயங்களும், மன நிந்தனைகளும்,  மத நிந்தனைகளும் நடைபெறும்போது தான் ஒரு முஸ்லிமாக இருந்த நிலையில் கவனத்தில் கொள்ளாதிருப்பது ஏன் என்பது தெரியவில்லை.

கலிமாவை மொழிந்த ஒரு முஸ்லிமை பொறுத்தவரையில் அவனுக்கு  முதலாவதாக அல்லாஹ் ரஸூல் அடுத்த படியானதே அரசியலாக இருக்க வேண்டும். முதல் அரசியல் அடுத்ததாக மார்க்கம் என்ற வகையில் இருக்கும் ஒருவனுக்கு மார்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதையும் இவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.

-பேருவளை ஹில்மி

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.