பொலிஸ் அதிகாரியிருவரின் மனைவி மற்றும் ஒரே மகன் கொரோனா தொற்றுக்கு இலக்காகி பலி!

பொலிஸ் அதிகாரியிருவரின் மனைவி மற்றும் ஒரே மகன் கொரோனா தொற்றுக்கு இலக்காகி பலி!

பொலிஸ் தலைமையகத்தில் உதவி பொலிஸ் கண்காணிப்பாளரின் (ASP) மனைவி மற்றும் ஒரே மகன் கொரொனா வைரஸால் உயிரிழந்துள்ளதாக பொரலஸ்கமுவ சுகாதார அதிகாரி தெரிவித்தார்.

57 மற்றும் 26 வயதுடைய இருவரும் எட்டு நாட்களுக்குள் இறந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

பொரலஸ்கமுவ, ரத்னாபிட்டிய, திவுல்பிட்டியவில் வசிக்கும் ASPயின் மனைவி 8 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மற்றும் அவரது மகன் நோய்த்தொற்றுக்கு ஆளாகி 30ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

எனினும் பாதிக்கப்பட்ட அmதிகாரி தற்போது குண்டசாலை பொலிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த அவருடைய மனைவி மற்றும் மகனின் இறுதிச் சடங்குகள் தெஹிவளையில் உள்ள மயானத்தில் நடைபெற்றன.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.