கொரோனாவால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் சில வியாபார மாபியாக்கள் சீனி மற்றும் அரிசியை முடக்கி, தட்டுப்பாட்டை ஏற்படுத்தி நாட்டில் பொருட்களுக்கான விலை கூடி விட்டது என்று பாரிய பிரச்சாரங்களை முன்னெடுத்தனர்.இதனை சாதகமாக பயன்படுத்திய பல சில்லறை வியாபாரிகளும் பொருட்கள் தட்டுப்பாடு என கூறி கண்ட கண்ட விலைகளில் பொருட்களை விற்றனர். இதன்காரணமாக பொது மக்கள் பாரிய உள பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தனர் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அவரது ஊடக செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,
இத்தகைய அசாதாரண நிலையில் நாட்டை அப்படியே விடாமல் அரசாங்கம் களத்தில் இறங்கி சீனி, அரிசி போன்றவற்றை பதுக்கி வைத்திருந்த களஞ்சியசாலைகளை கண்டு பிடித்து விலைக்கட்டுப்பாட்டை பிரகடனப்படுத்தி நாட்டின் அனைத்து பாகங்களிலும் சீனி கிடைக்கச்செய்துள்ளமை பொதுமக்களின் வரவேற்புக்குள்ளாகியுள்ளது. ஒரு அசாதாரண நிலையில் நாட்டை எவ்வாறு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதற்கு பொருத்தமான ஆட்சியாளர்களாக ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் திகழ்கின்றனர்
கடந்த காலத்தில் யுத்தத்தை கட்டுப்படுத்திய ராஜபக்ஸ சகோதரர்கள், கொரோனா அவல நிலையையும் கட்டுப்படுத்தி, பொருட்கள் விலையையும் கட்டுப்படுத்தி, அசாதாரண நிலையில் எவ்வாறு நாட்டைக்கொண்டு போவது என்பதில் தமது திறமையை காட்டியுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
-மாளிகைக்காடு நிருபர்