கொரோனா தொற்றுக்கு இலக்காகி மனைவி இறந்த மூன்றே தினங்களில் கணவனும் உயிரிழப்பு!

கொரோனா தொற்றுக்கு இலக்காகி மனைவி இறந்த மூன்றே தினங்களில் கணவனும் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மனைவி உயிரிழந்த மூன்று நாட்களின் பின்னர் கணவனும் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவமானது சாவகச்சேரி - நுணாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அதேயிடத்தைச் சேர்ந்த சேர்ந்த 96 வயது முதியவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

நுணாவில் கிழக்கைச் சேர்ந்த 90 வயதுடைய பெண் கடந்த 3ஆம் திகதி வெள்ளிக்கிழமைகொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் இன்னும் சுகாதார நடைமுறைகளின் கீழ் தகனம் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் அவரது கணவர் 96 வயதில் வைரஸ் தொற்றினால் நேற்று உயிரிழந்துள்ளார்.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.