400,000 ஃபைசர் தடுப்பூசி மருந்துகள் இன்று (30) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக மேலும் 400,000 ஃபைசர் தடுப்பூசி மருந்துகள் நாளை இலங்கையை வந்தடைய உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று 941 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 28) 61 கோவிட் இறப்புகள் பதிவானதாக சுகாதார சேவைகள் இயக்குனர் அறிவித்தார்.
இதனடிப்படையில் இலங்கையில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 12,847 ஆக உயர்வடைந்தது.
மேலும், 172 கொரோனா தடுப்பூசி மையங்கள் இன்று இலங்கை முழுவதும் செயல்பட்டு வருகின்றன.
மொபைல் தடுப்பூசி பிரிவுகளும் நாட்டின் பல பகுதிகளில் செயல்பட்டும் வருகின்றது.