மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் இன் ஓய்வூதியம் மட்டும் எத்தனை கோடி ரூபாய் தெரியுமா?

மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவார்ட் கப்ரால் இன் ஓய்வூதியம் மட்டும் எத்தனை கோடி ரூபாய் தெரியுமா?

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் எட்டு வருட காலத்திற்கு சுமார் 108 மில்லியன் ரூபாய் ஓய்வூதியம் பெற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், “ஒப்புதல் அளித்தாலும் எடுக்க மாட்டேன்” என்றும் கப்ரால் கூறியிருந்தார்.

ஆனால் அவர் அதை தனது ஐந்து ஆண்டு காலத்தின் முடிவின் போது பெற்றுக்கொண்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் மேலும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.