“கலுதுர பொப் மார்லி” ஐ கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

“கலுதுர பொப் மார்லி” ஐ கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

ஆகஸ்ட் மாதம் பேருவளை கடற்கரையில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் முக்கிய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

போதைப்பொருள் நடவடிக்கையின் பின்னணியில் உள்ள முக்கிய சந்தேக நபர் கலுதுர சமிந்த டாப்ரூ அல்லது கலுதுர பாப் மார்லி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மாலபே பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகநபர், ஆகஸ்ட் 31 ஆம் திகதி இலங்கை பொலிஸார் மற்றும் கடற்படையினரினது கூட்டு நடவடிக்கையின் போது மீன்பிடி விசைப்படகில் இருந்து கைப்பற்றப்பட்ட 288.64 கிலோ ஹெராயின் தொடர்பில் தேடப்பட்டுள்ளார்.

சுற்றிவலைப்பை தொடர்ந்து ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர், அதன் பிறகு விசாரணையில் கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட முக்கிய சந்தேகநபர் கலுதுர பாப் மார்லி என்று கண்டுபிடிக்கப்பட்டது.

சந்தேகநபர் குறித்த தகவல் தெரிந்தால் கீழ்க்கண்ட துரித எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

071 8592727 / 0112 343333-4. (யாழ் நியூஸ்)

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.