கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்ட நடிகை!

கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்ட நடிகை!


உடல்நலக் குறைவாலும் சினிமா துறையில் தற்போதைய சூழல் காரணமாகவும் நடிகை ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.

கன்னட தொலைக்காட்சி சீரியல் நடிகை சௌஜன்யா பெங்களூரு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். சௌஜன்யா கன்னடப் படத்திலும் பணியாற்றியுள்ளார். இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரது வீட்டில் இருந்து ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் எழுதப்பட்ட நான்கு பக்க கடிதத்தை பொலிசார் கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தில், உடல்நலக் குறைவாலும் சினிமா துறையில் தற்போதைய சூழல் காரணமாகவும், கடந்த பல நாட்களாக சிரமப்பட்டு வந்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் இந்த முடிவை எடுப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்று சௌஜன்யா குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் செப்டம்பர் 27, 28 மற்றும் 30ஆகிய மூன்று திகதிகள் எழுதப்பட்டுள்ளன. இதில் இருந்து சௌஜன்யா மூன்று நாட்களுக்கு முன்பே தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்ததாக பொலிசார் கருதுகின்றனர்.

-தெரண

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.