மர்ம நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நூறுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் மருத்துவமனைகளில் அனுமதி! (இந்தியா)

மர்ம நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நூறுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் மருத்துவமனைகளில் அனுமதி! (இந்தியா)

ஒரு வாரத்திற்கும் மேலாக இந்தியாவின் உத்திரபிரதேசின் சில மாவட்டங்களில் மர்ம நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட நூறுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இந்த புதிய நோய் தொற்று காரணமாக 50 பேர் வரையில் உயிரிழந்ததுடன், அவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி உள்ளிட்ட நோய் அறிகுறிகளுடன் சிறுவர்கள் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவர்களுக்கு கொவிட்-19 தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள குறித்த நோய் தொற்று தொடர்பில் மருத்துவர்கள் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இது ஒருவகை நுளம்பினால் ஏற்பட்டதா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் சந்தேகித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.