
ஜூலை மாதத்தில், 27,326 புதிய கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதோடு, மேலும் அனைத்து நாடுகளுக்குமான 28,903 புதிய கடவுச்சீட்டுகள் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் வழங்கப்பட்டதாக அருண செய்தி பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், ஆகஸ்ட் 31 வரை, 161,820 புதிய கடவுச்சீட்டுகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வழங்கியுள்ளது.
2020 உடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை அதிகரித்து வரும் போக்கைக் காட்டுகிறது, கடந்த ஆண்டு முழுவதும் மொத்தமாக 204,081 புதிய கடவுச்சீட்டுகளே வழங்கப்பட்டன. (யாழ் நியூஸ்)