
திருத்தப்பட வேண்டிய காதி நீதிமன்ற சட்டங்கள் தொடர்பாக பல ஆண்டுகளாக சர்ச்சைகள் இருந்து வந்தபோதிலும், இது சம்பந்தமாக பல்வேறுபட்ட காலப்பகுதியில் பல்வேறுபட்ட குழுக்கள் அமைக்கப்பட்டது.
இதில் பிரச்சினைகளுக்கு 80% தீர்வு கண்ட ஒரு அறிக்கையாகவே நீதிபதி சலீம் மர்சூப் அவர்களின் அறிக்கை அமைந்திருந்தது.
மீதி பிரச்சினைகளை சமரசமான முறையில் பேசித் தீர்வு காணப்பட வாய்ப்பு காணப்பட்ட போதிலும். பல்வேறுபட்ட காரணங்களை காட்டி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இதை மறுத்து வந்தது.
இதனால் ஆராய்ந்து அறிக்கை அறிக்கை சமர்பிக்கப்பட நியமிக்கப்பட்ட குழு இரண்டாக பிளவுபட்டு, சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களின் தலைமையின் கீழ் ஒரு அறிக்கையும், நீதிபதி சலீம்மர்சூப் அவர்களின் தலைமையில் இன்னொரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.
இவ்விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களின் பக்கத்தை சாய்ந்ததால் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் தொடர்ந்து வந்தது.
இருந்தாலும் இப்பிரச்சனைக்கு கூடிய சீக்கிரம் தீர்வு கண்டு பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தவறிவிட்டது என்பதே உண்மை.
ரவூப் ஹக்கீம் அவர்கள் நீதி அமைச்சராக இருந்தபோது கூட இலகுவாக தீர்க்க முடிந்த பிரச்சினை பொறுப்பானவர்களின் பொறுப்பற்ற நிலையின் காரணமாக இன்று சகல உரிமைகளையும் இழக்க முதல் காரணமாகும்.
மேலும் இப் பிரச்சினையானது சம காலத்தில் சிலரால் முஸ்லிம் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் இரகசியமாக திருத்தப்பட்டு, இறுதி முடிவு வரும் வரை, பொறுப்பானவர்கள் கவணையீனமாக இருந்தில் இருந்து இவர்கள் சமூகத்திற்கு பொறுப்பு சொல்ல வேண்டும்.
முஸ்லிம் தனியார் சட்டங்கள் திருத்தப்பட்டு சட்ட வரைபுகளுக்காக சென்று முடிவுகளை எட்டும் வரை, இவர்கள் மௌனமாக இருந்தார்கள் என்பதே உண்மை.
இஸ்லாமிய சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக இஸ்லாமிய தனியார் சட்டம் திருத்தப்படுகின்றது என்ற உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்தி, தற்பொழுது ஏற்பட்டுள்ளது போன்ற முஸ்லிம்களின் எதிர்பை வெளிக்காட்ட, இவர்களால் இது சம்பந்தமாக சமூகத்திற்கு இந்தவிதமான அறிவுறுத்தல்களையும், அறிவிப்புகளையும், தெளிவுகள்யும், இது சம்பந்தமான முடிவுகளையும் இஸ்லாமிய சமூகத்தின் மார்க்க சட்ட விழுமியங்களின் பாதுகாவலர்கள் வழங்கவில்லை.
சில முக்கியஸ்தர்களின் வேண்டுகோளுக்கும் ஆதங்கத்திற்கும் இணங்க, இரகசியமாக இஸ்லாமிய சட்டங்கள் திருத்தப்பட்டு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது, யாரும் வாய் திறப்பதாக தெரியவில்லை என கடந்த 5 ஆம் திகதி, (காதி நீதிமன்ற ஒழிப்பும் முஸ்லிம் சட்டத்திற்கு எதிராகத் துப்பாக்கி நீட்டும் முஸ்லிம்களும்)
என்ற கட்டுரை ஒன்றின் மூலம், சமூக வலைத்தளங்களில் இவ்விடயத்தை முஸ்லிம் சமூகத்திற்கு எடுத்துச் சொல்லும் வரையிலும், அதையொட்டி சகோதரர் ஒருவர் சமூக வலைத்தளங்கள் மூலமாக அமைச்சரை பேட்டி கண்டு, அதன் மூலம் சமூகத்தை தெளிவூட்டும் வரை, பொறுப்புக்கூற வேண்டிய ஜம்இய்யதுல் உலமா மௌனமாக இருந்ததை இங்கு குறிப்பிட வேண்டும்.
(மக்களுக்கு தெளிவுகளையும் உண்மைகளையும் கொண்டுபோய் சேர்க்க உதவி செய்த அத்தனை social media இனையத்தளங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்)
இவ் விடயமானது, இவ்வாறான ரீதியில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படாமல் இருந்திருந்தால், இவ்விடயம் பாராளுமன்றத்தில் நிறைவேறும் வரை மக்கள் அறியமாட்டார்கள் என்பதே உண்மை.
மேலும் கட்டுரைகள் முலம் மக்களுக்கு இது வெளிப்படுத்ப்பட்ட போதும்,
திருத்தக் குழுவில் உள்ள ஒரு சிலர், மக்களுக்கு இது தெரியப்படுத்துவதையிட்டு விசனம் தெரிவித்ததையும் இங்கு ஞாபகப்படுத்த வேண்டும்.
பல மாதங்களாக சட்டங்கள் திருத்தப்பட்டு, ஆலோசனைகள் நடத்தப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டு, இறுதியாக சட்ட வரைபுக்கு செல்லும் வரை பொறுப்பான ஜமீயத்துல் உலமா மௌனமாக இருந்ததன் காரணம் என்ன.
இது சம்பந்தமாக வழமை போன்று கவலை தெரிவித்து ஒரு அறிக்கையை அமைச்சரிடம் கையளித்து அத்தோடு அவர்களின் இது சம்பந்தமான பொறுப்பை நிறைவு செய்து கொண்டார்கள்.
தற்போது இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, முஸ்லிம் அமைப்புகள் இதில் கவனத்தில் கொல்லப்படவில்லை. முஸ்லிம் அமைப்புகளின் ஆலோசனைக்கு வாய்ப்புக்கள் அளிக்கப்படவில்லை என அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளவர்கள், இது காலம் வரையில் இவ்விடயமானது இறுதிகட்ட சட்ட வரைபுக்கு செல்லும் வரையில் அசட்டுத்தனமாக இருந்தார்கள் என்பதே உண்மை.
முஸ்லிம் மார்க்க சட்ட விடயங்களில் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட, சட்டபூர்வமான, அதிகாரம் வாய்ந்த, ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சட்டம் திருத்தப்பட்டு இறுதி சட்ட வரைபுகளுக்கும் செல்லும்வரை மௌனமாக இருந்து,
தட்டிக் கேட்க அதிகாரம் உள்ளவர்கள், முஸ்லிம் சட்டத்தை பாதுகாக்க கடமைப்பட்டவர்கள், தக்க சந்தர்ப்பத்தில் தட்டிக் கேட்காமலும், அதை பாதுகாக்க தெரியாதவர்களாகவும், அதற்காக சம்பந்தப்பட்டவர்களுடன் போராடாமல் இருந்து, தற்போது அறிக்கை விடுவதானது, தாங்களின் பொறுப்பற்ற நிலையின் காரணமாக ஏற்பட்ட அழிவில் இருந்து தங்கள் கைகளை கழுவிக் கொள்ள முற்படுவதை உணரமுடிகின்றது.
முஸ்லிம் தானியார் சட்ட விடயத்தில் இதற்காக அமைக்கப்பட்ட குழுவினர் இறுதிவரை எந்த வித தகவல்களையும் வெளியிடாமல் சமூகத்திற்கு சூழ்ச்சி செய்தது உண்மை. ஆனால் அதற்கு காரணமாக இருந்தவர்கள் ஜமீயத்துல் உலமா என்பதை மறுக்க முடியாது. இவர்களின் உறுதியற்ற போக்கே இந்த வியத்தில் வந்தவர்கள் எல்லாம் வம்பிளுக்க காரணமாக அமைந்து என்பதை மறுப்பதற்கில்லை.
இஸ்லாமிய சட்ட வரையரைகள் மார்க்க அறிஞர்களின் வழிகாட்டல் இன்றி நடந்து முடிந்தது என்பது நகைப்புக் குறிய விடயமாகும்.
மக்களின் பணத்தில் இருந்து கொடுப்பணவுகளையும் வரப்பிரசாதங்களையும் அனுபவிக்கும் இவர்கள் தமது பொறுப்பை சரியாக நிறைவேற்ற வில்லை என்றால், இவர்கள் வாங்கும் கொடுப்பணவுகளும் ஹலாலாகுமா?
நான் ஒரு நிறுவணத்தில் வேலை பார்பவனாக இருந்தால், நான் வாங்கும் கொடுப்பனவு ஹலாலாக அமைய, எனக்கு தரப்பட்ட பொறுப்புக்களை விசுவாசமாகவும் பொறுப்பாகவும் நிறைவேற்ற வேண்டும். நான் அசட்டுத் தனமாகவும், பொறுப்பற்ற விதத்திலும், விசுவாசம் இல்லாமலும் நடந்து கொண்டால், நான் வாங்கும் கொடுப்பனவு எனக்கு ஹலால் ஆகாது என்பதே உண்மை.
எனவே இப் பொறுப்பில் இருந்து இவர்கள் விலக முடியாது. இது இவர்களின் கடமையும் பொறூப்புமாகும். இவர்கள் விட்ட தவறை உச்ச நீதி மன்றம் மூலமாகவும் சமூகத்திற்கு பெற்றுக் கொடுக்க இவர்கள் பொறுப்பானவர்கள்.
இலங்கையில் முஸ்லீம்களின் சகல உறிமைப் பிரச்சினைகளின் போதும் இவர்கள் இவ்வாறான நடைமுறையை கைக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
எனவே இது சம்பந்தமாக எதிர் காலத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்படப் போகும் பாரிய அநியாயங்களுக்கும், அசௌகரியங்களுக்கும், துன்பங்களுக்கும், கஷ்டங்களுக்கும், இலங்கை ஜமியத்துல் உலமாவும் ஒரு பொறுப்புதாரிகள் என்பதை மறுக்க முடியாது.
-பேருவளை ஹில்மி