ஓகஸ்ட் மாதத்திற்கு செலுத்தப்பட வேண்டிய மீதமுள்ள பொது உதவி கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவு உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் இன்றும், நாளையும் வழங்கப்படவுள்ளன.
இன்றும், நாளையும் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களும் திறக்கப்பட்டிருக்கும். இவ்விரு தினங்களில் கொடுப்பனவை பெற்று கொள்ளுமாறும் திணைக்களம் அறிவித்துள்ளது.
கொடுப்பனவை பெறுபவர்கள் முறையான சுகாதார விதிமுறைகளை பேணி தபால் நிலையங்களுக்கு செல்லுமாறும் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.