2022 முதல் நாய் வரி அறிமுகம்!

2022 முதல் நாய் வரி அறிமுகம்!

தம்புள்ளை மாநகர சபை பகுதியில் உள்ள 13 கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மற்றும் நாய்களுக்கு 2022 முதல் வரி விதிக்கப்படும் என்றும் குறித்த வரியானது ஜனவரி 31 முதல் கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை மாநகர சபை பொதுக் கூட்டத்தில் இது போன்ற ஒரு முன்மொழிவை செய்ய உள்ளதாக ஒரு துண்டு பிரசுரத்தில் நகராட்சி கவுன்சிலர்களுக்கு தம்புள்ளை மாநகர சபை மேயர் ஜாலிய ஓபாத அறிவித்துள்ளார்.

நகராட்சி கவுன்சிலின் மேயராக அவரது அதிகாரத்தின் கீழ், நகராட்சி வரி செலுத்துவோருக்கு வரி அதிகரிப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. வரித் தொகை 50% இலிருந்து 100% ஆக உயர்த்தப்படும் என்றும், அனைத்து வணிகங்களுக்கும் 150 சட்டமூலத்தின் கீழ் வரி அளவு அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி தொகையை அதிகரிக்கும் போது வருடாந்திர வருமானத்தின் 6 அலகுகளின் கீழ் வரி வசூலிக்க முன்மொழிவுகள் செய்யப்பட உள்ளன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.