தெரெண டிவிக்கு சொந்தமான யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
தெரெண டிவியின் தலைவர் திலித் ஜயவீர அவரது முகப்புத்தக கணக்கில் பதிவொன்றை வெளியிட்டு, "டிவி தெரெண யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டுள்ளது!" என தெரிவித்துள்ளார்.
இம்மாத தொடக்கத்தில் 'டிவி தெரெண' யூடியூப் சேனல் 3 மில்லியன் சப்ஸ்கிரைப்பர்ஸ்களை தாண்டிய முதல் உள்ளூர் யூடியூப் சேனல் ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.
மேலும் அந்த சேனல் 'Crypto News' என பெயர் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.