அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்! தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை முதலிடம்!

அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்! தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை முதலிடம்!


தெற்காசிய பிராந்தியத்தில் தினசரி கொரோனா மரண விகிதத்தில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.


ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு நாளொன்றுக்கு ஏற்படும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தற்போது தெற்காசிய பிராந்தியத்தின் முதல் எட்டு நாடுகளில் இலங்கை இடம்பிடித்துள்ளது.


இது நாட்டில்  ஏற்படும் கொரோனா மரணங்களின் ஒரு மில்லியன் மக்கள் தொகையினரில் 9 பேர் அடங்குவதே இதற்குக் காரணம் ஆகும்.


இந்த பட்டியலில் வங்காளதேசம், நேபாளம், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் முறையே இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் உள்ளன.


இந்நிலையில், மாலத்தீவில் கடந்த 19 நாட்களில் கொரோனா மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை.


அதேசமயம், கொரோனா தொடங்கியதில் இருந்து இன்று வரை பூடானில் மூன்று மரணங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.


முன்னதாக, பட்டியலில் நான்காவது இடத்தில் இடம்பிடித்திருந்த இலங்கை, கடந்த 10 நாட்களில் தினசரி மரணங்கள் வேகமாக அதிகரித்ததால், முதலிடத்தை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.