உலமா சபை, சூரா சபை உட்பட முஸ்லிம் தலைமைகள் ஏன் மௌனம்? இளம் கிறிஸ்தவ சமூக செயற்பாட்டாளர் கேள்வி!

உலமா சபை, சூரா சபை உட்பட முஸ்லிம் தலைமைகள் ஏன் மௌனம்? இளம் கிறிஸ்தவ சமூக செயற்பாட்டாளர் கேள்வி!


'உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் முஸ்லிம் மக்கள் நடத்­திய தாக்­குதல் அல்ல. சிறிய அடிப்ப­டை­வாத குழு­வொன்று நடத்­திய தாக்­குதல் என்பதே பெரும்­பான்­மை­யோரின் கருத்தாகும். இது ஏற்றுக் கொள்ளப்பட்டு­விட்­டது. 

இந்த தாக்­கு­தலில் அனைத்து சமூகமும் பாதிக்கப்பட்டாலும் குறிப்பாக கிறிஸ்­த­வர்­களும் முஸ்­லிம்­க­ளுமே பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தொடர்பில் உலமா சபை, சூரா சபை உள்ள­டங்­கிய அனைத்து முஸ்லிம் தலை­மை­களும் இன்று ஆழ்ந்த மௌனத்தில் இருக்­கி­றார்கள். இது தொடர்பில் நாம் அதி­ருப்தி அடைந்­துள்ளோம். கவலைப்படுகிறோம். நாம் முஸ்­லிம்­க­ளுடன் தொடர்ந்தும் கை கோர்த்­தி­ருந்தோம். ஆனால் இப்­போது அவர்கள் மௌனித்து விட்­டார்கள். நாம் அவர்­க­ளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார். ஆனால் அவர்கள் வெளியே வரு­கி­றார்கள் இல்லை' என இளம் கிறிஸ்­தவ சமூக செயற்­பாட்­டாளர் செஹான் மாலக கமகே தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதி கோரியும் இன நல்லிணக்­கத்தை வலி­யு­றுத்­தியும் தொடர்ச்­சி­யாக செயற்­பட்டு வரும் இவர் தனது காணொளி பதிவில் மேலும் தெரிவித்துள்­ள­தா­வது, 

'கத்­தோ­லிக்­கர்­க­ளா­கிய நாம் முஸ்­லிம்­க­ளுடன் தொடர்ந்து கைகோர்த்து நல்லுற­வுடன் வாழ்ந்து வந்­துள்ளோம். இரு சமூகங்களுக்­கி­டையில் கல­வ­ரங்கள் ஏற்­ப­டாத வண்ணம் பாது­காத்து வந்­துள்ளோம்.

போரு­தொட்ட சம்­ப­வத்தின் போது பேராயர் மல்கம் ரஞ்சித் காலையிலே அங்கு வந்து வன்­செ­யல்கள் இடம்­பெ­றாத வண்ணம் தடுத்து நிறுத்­தினார். நான் முஸ்லிம்களுக்காக அங்கு முன் நின்றேன். அவர்­க­ளுக்­காக பேசினேன்.

சம்­பவ தினத்­தன்று ஒருவர் தனது முகநூல் பக்­கத்தில் ‘தம்­பி­க­ளுக்கு அடிப்போம்’ என பதி­வினை வெளி­யிட்டார். கத்­தோ­லிக்க முகநூல் பக்கங்­களில் இது வைர­லா­னது. சிறிது நேரத்தில் பாரிய கலவரமொன்று ஏற்­பட இருந்­தது. அது எம்மால் தடுக்கப்பட்டது.

நாம் சி.ஐ.டி.க்கும் அறி­வித்தோம். பின்பு கத்­தோ­லிக்க முகநூல் பக்கங்­களை முகா­மைத்­துவம் செய்­ப­வர்­களை ஒன்று கூட்டி இனக் கல­வ­ரங்­களை தூண்டும் வகை­யான பிர­சா­ரங்கள் மேற்­கொள்ளக் கூடாது. முஸ்­லிம்­க­ளுடன் நல்­லு­றவைப் பேண வேண்டும் என்றோம். இதற்கு நானே தலை­மைத்­துவம் வழங்­கினேன். முக­நூலில் பதிவிட்டவரை தேடிச்­சென்று அறி­வுரை வழங்­கினேன். சுமார் 28 மாதங்­க­ளாக முகநூல் குரோத பேச்­சுக்கள் அறிக்­கைகள் இடம்பெறாது தவிர்த்தோம்.

இன்றும் கூறு­கிறேன். இது முஸ்லிம் மக்கள் நடத்­திய தாக்­குதல் அல்ல. சிறிய அடிப்­ப­டை­வாத குழு­வொன்று நடத்­திய தாக்­குதல். இந்த நிலைப்­பாட்­டிலே பெரும்­பான்­மையோர் இருக்­கின்­றனர். இந்நிலைப்பாடு ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

உலமா சபை, சூரா சபை உட்­பட அனைத்து முஸ்லிம் தலைமைத்துவங்­களும் பாதிக்­கப்­பட்ட முஸ்­லிம்கள் தொடர்பில் செயற்­ப­ட­வில்லை. அவர்கள் மீது நாம் எமது அதி­ருப்­தியை வெளியிடு­கிறோம். கவ­லைப்­ப­டு­கிறோம். அவர்கள் ஆழ்ந்த மௌனத்தில் இருக்­கி­றார்கள். நாங்கள் அவர்­க­ளுடன் தொடர்ந்து கைகோர்த்­தி­ருந்தோம். நாங்கள் பேச்­சு­வார்த்தை நடத்தத் தயார். முஸ்லிம் தலை­மைத்­துவம் இன்னும் மௌன­மா­கவே இருக்­கி­றது.

அவர்கள் வெளியே வரு­கி­றார்கள் இல்லை. நாம் அனைத்து இன மக்களும் வீடு­க­ளிலும், வர்த்­தக நிறு­வ­னங்­க­ளிலும் கறுப்பு கொடி ஏற்றி எதிர்ப்பைத் தெரி­விக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்­துள்ளோம். உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னணியில் உள்ளவர்களுக்கு உரிய தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்­பதே எமது கோரிக்கை. ஆனால் எமது எதிர்ப்பு போராட்­டத்­திற்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்கி­றார்கள் இல்லை. பயந்து போய் இருக்கிறார்கள். இந்­நி­லைமை ஆட்சியாளர்­க­ளுக்கு சாத­க­மாக அமைந்­துள்­ளது. ஆட்­சி­யா­ளர்கள் தொடர்ந்தும் எம் இரு சமூகத்தையும் பிள­வு­ப­டுத்தி வைத்­தி­ருக்க முடியும்.

பௌத்த குரு­மார்கள் இது தொடர்பில் எம்­முடன் கைகோர்த்துள்ளவர்கள். எம்­முடன் கலந்­து­ரை­யாடிக் கொண்டிருக்கிறார்கள். என்­றாலும் எந்த முஸ்லிம் தலை­வரும் இதில் ஈடு­பா­டில்­லாமல் இருக்­கி­றார்கள். அவர் எம்மை தொடர்பு கொள்ளவில்லை.

முஸ்லிம் தலை­வர்­க­ளுக்கு கூறு­கிறோம். நம்­பிக்­கை­யுடன் முன்வாருங்கள். அன்­புடன் அழைக்­கிறோம். இப்­போ­தா­வது வெளியே வரா­விட்டால் எம்­முடன் கைகோர்க்காவிட்டால் பின்பு கவலைப்படுவீர்கள். முஸ்லிம் அரசியல் வாதிகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்தவில்லை. எதிர்வரும் 21ஆம் திகதி கறுப்புக் கொடி எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் அனைவரும் எம்முடன் இணைய வேண்டும். ஆனால் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதாக முஸ்லிம் சமூகம் இதுவரை எமக்கு அறிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ஏ.பரீல் - விடிவெள்ளி

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.