மக்கள் மனதை வென்ற மங்கள!

மக்கள் மனதை வென்ற மங்கள!


இலங்கை சமகால அரசியலைப் பொருத்தவரை, இன்று மக்கள் மனதில் அரசியல்வாதிகள் எனக் கூறும் போது, மனதில் ஒரு வெறுப்பு ஏற்படும் நிலையில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் மறைவு சிறுபான்மை மக்களின் மத்தியில் ஒரு சகோதரனை இழந்தது போன்ற இழப்பை உணரமுடிகின்றது.


குறிப்பாக முஸ்லிம் மக்களுடன் மிகவும் நெருக்கமாக அன்னியோன்னியமாக பழகி, முஸ்லிம் மக்களின் மனதை வென்றவர். முஸ்லிம்களின் விசேட தினங்களின் முஸ்லிம் போது மக்களுடன் சேர்ந்து  சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டவர்.


இந்த நாட்டில் ஒரு பௌத்தராக பிறந்த இவர், பௌத்த தர்மத்தை மதித்து, பௌத்த தர்மம் கூறும் கூறும் கருணை, காருண்யம், தாராள மனப்பான்மை போன்றவற்றை மதித்து அவற்றுக்கு முதலிடம் கொடுத்து  தனது அரசியலை முன்னெடுத்தவர்.


முஸ்லிம் மக்களுக்கு அநியாயங்கள், அசாதாரணங்கள் நடக்கும் போது துனிந்து நின்று  குரல் கொடுத்தவர். இதனால் குறிப்பாக  சிறுபான்மை மக்களின் மனதை  வென்றவர்.


நாட்டுப் பற்று என்ற போர்வைக்குள் தலைவிரித்தாடும் இனவாதத்தை கடுமையாக எதிர்த்து, இனவாதம் ஒரு நாட்டில் இருக்கும் வரை அந்த நாட்டில் எதிர்காலம் இல்லை என்ற உண்மையை உடைத்துக் கூறியவர். சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுத்த தலைசிறந்த ஒரு அரசியல்வாதியை இன்று இலங்கை மண் இழந்து வந்துவிட்டது. 


இவரது இழப்பு சிறுபான்மை மக்களுக்கு மட்டும் அல்லாமல் நாட்டுக்கும் பெரிதொரு ஒரு இழப்பாகும். பதவிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் அதிகாரத்தை மீறி செயல்படும்போது அதற்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்த ஒரு மாவீரன் மங்கல. அத்தோடு மட்டும் நின்று விடாமல் அவ்வப்போது பதவிக்கு வந்த அரசாங்கங்கள் நிலைமாறி  செயற்படும்போது அதற்கெதிராக செயல்பட்டு அரசை கவிழ்த்து நாட்டைக் காப்பாற்றிய ஒரு செயல் வீரனை  இன்று  நாடு இழந்து விட்டது.


உண்மையில் முஸ்லிம் சமூகம் இவருக்காக கடமைப்பட்டுள்ளது. எனவே உலகில் இவரது  நன்மதிப்புடனான வாழ்க்கை  எவ்வாறு அமைந்ததோ, அதேபோல் அவரது மத அனுஷ்டான நம்பிக்கையின் படி அவரது இறுதிக் கிரியைகளும் இனிதே நடைபெற வேண்டுகிறோம்.


-பேருவளை ஹில்மி


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.