வீட்டை விட்டு வெளியேறாதீர்கள் - அரசு எச்சரிக்கை!

வீட்டை விட்டு வெளியேறாதீர்கள் - அரசு எச்சரிக்கை!

அனைத்து மக்களும் உடனடியாக கொரோனா தடுப்பூசியைப் பெற வேண்டும் அல்லது அத்தியாவசியமற்ற ஒன்றிற்காக வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அரசாங்கம் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவுறுத்துகிறது.

நாட்டில் சுமார் 1.5% தொற்றாளர்கள் பலியாகுவதாகவும், பெரும்பாலானோர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு தகவல் இயக்குநர் ஜெனரல் பின்வருமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

  • அனைவரும் கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுங்கள் - உலகம் முழுவதும் பெருமாலானோர் உயிர்த்தப்பியது கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டதால் ஆகும். 
  • அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வீட்டை விட்டு வெளியே செல்லவும். 
  • மக்கள் ஒன்று கூடும் திருமண நிகழ்வு, மரண நிகழ்வு மற்றும் ஏனைய நிகழ்வுகளில் இருந்து தவிர்ந்து கொள்ளவும். 
  • பொது இடங்களுக்கு செல்கையில் முகக்கவசம் அணியுங்கள். 
  • அறைகள், மண்டபம், லிஃப்ட், வாகனம் போன்ற மூடப்பட இடங்களில் மக்கள் கூட்டத்தில் இருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். 
  • அடிக்கடி சவர்க்காரம் இட்டு கைகளை சுத்தம் செய்து கொள்ளுங்கள். 
  • இனம் தெரியாதவர்களிடமிருந்து இரு மீட்டர்கள் இடைவெளியினை பேணுங்கள். 
  • நெடுநாள் நோய்கள் இருப்பின் வீட்டில் இருந்து வெளியே செல்லாதீர்கள். 
  • உங்கள் மற்றும் உங்கள் உறவினர்களின் உயிரை காக்க நீங்களை பொறுப்புதாரராய் இருங்கள். 
(யாழ் நியூஸ்)

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.