பிரதமர் மகன் யோஷித புதிய எரிவாயு நிறுவனத்தை ஆரம்பிக்கின்றாரா??

பிரதமர் மகன் யோஷித புதிய எரிவாயு நிறுவனத்தை ஆரம்பிக்கின்றாரா??

உள்நாட்டு எரிவாயு வணிகத்தில் பங்குகளைப் பெற முயற்சிப்பதாக வந்த வதந்திகளை மறுத்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராகபக்சவின் மகன் யோசித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வதந்திகளை மறுத்த யோஷித ராஜபக்ச, தனக்கு எந்த எரிவாயு நிறுவனமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அவரது புகழை கெடுக்கவே இவ்வாறு போலி பிரச்சாரம் பரப்பப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இத்தகைய கதைகள் புனையப்பட்டதாக யோஷித ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

இது மற்றொரு அப்பட்டமான பொய் என்று கூறிய அவர், இதுவும் தங்க குதிரை வைத்திருப்பதாக முந்தைய வதந்திகளைப் போன்றது என்று தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.