க்ரெடிட்/டெபிட் கார்ட்கள் மூலம் வெளிநாட்டு பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை அதிகரித்த வங்கிகள்!

க்ரெடிட்/டெபிட் கார்ட்கள் மூலம் வெளிநாட்டு பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை அதிகரித்த வங்கிகள்!

உள்ளூர் வங்கிகள் கடன் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு பரிவர்த்தனைகளுக்கான மாற்று விகிதத்தில் கூடுதல் விகிதத்தை அதிகரித்துள்ளது.

தற்போதைய விகிதம் 2.5 சதவீதம் ஆகும். எனினும், வங்கிகள் இந்த விகிதத்தை 6-7 சதவிகிதமாக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சில வங்கிகள் ஏற்கனவே தங்கள் அட்டைதாரர் வாடிக்கையாளர்களுக்கு மேல் கூறப்பட்ட திருத்தம் குறித்து அறிவித்துள்ளதோடு, மற்றைய வங்கிகள் வரும் சில நாட்களில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விகிதத்துடன், ஒரு அட்டை வைத்திருப்பவர் வெளிநாடொன்றுக்க்ய் டொலர் பரிவர்த்தனை செய்யும் போது ஒரு அமெரிக்க டொலர் கிட்டத்தட்ட ரூ. 222 செலுத்த வேண்டும் என்று டெய்லிமிரர் பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.