அத்தியாவசிய பொருட்களின் அதியுயர் விலைகளை மட்டுப்படுத்த அரசின் புதிய திட்டம்!

அத்தியாவசிய பொருட்களின் அதியுயர் விலைகளை மட்டுப்படுத்த அரசின் புதிய திட்டம்!

அதிக விலையில் விற்கப்படும் அத்தியாவசிய பொருட்காளில் விலையை கட்டுப்படுத்த பங்கீட்டு முறை ஒன்றை அறிமுகம் செய்ய அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டுள்ளதாக தி சண்டே டைம்ஸ் செய்திப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

சமீப காலங்களில் சீனி மற்றும் அத்தியாவசிய பொருட்களில் விலை சந்தை யில் அதிகரித்த நிலையில், குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதற்காக லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

தனியார் துறை தற்போதைய நிலையிலே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டவுடன் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும், அதே நேரத்தில் பங்கீட்டு முறை செய்யப்படும் அளவு மற்றும் தற்போதைய சந்தை விலையை விட குறைவாக இருக்கும் விலைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன சண்டே டைம்ஸ் பத்திகைக்கு தெரிவித்துள்ளார்.

ஜூம் (Zoom) வழியாக நடைபெற திட்டமிடப்பட்டுள்ள அமைச்சரவை கூட்டத்தில் இப்பரிந்துரை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வறிக்கைக்கு பதிலளிக்கும் முகமாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மாற்று பொருளாதார மாதிரி திட்டமானது நாம் பரிந்துரை இடத்திற்கே அழைத்துச் செல்கின்றது. மற்றும் குறைந்த பட்சம் இம்முறை “ஹால் பொத” இனை டிஜிட்டல் முறையில் தொலைப்பேசிகளுக்கு அறிமுகம் செய்யவும்” (யாழ் நியூஸ்)
 

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.