நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் தபால் மூலம்!

நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் தபால் மூலம்!

அரச வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவில் பதிவுசெய்யப்பட்டு சிகிச்சை பெறுகின்ற நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளை தபால் மூலம் விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் சுகாதார அமைச்சும் தபால் திணைக்களமும் இணைந்து மீண்டும் ஆரம்பித்துள்ளன.

மருந்துகள் தேவைப்படும் நோயாளர்கள் தாம் சிகிச்சை பெற செல்லும் வைத்தியசாலைக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, தேவையான தகவல்களை வழங்கி மருந்துகளை வீட்டிற்கே வரவழைத்துக் கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சம்பிக்கா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொலைபேசியின் ஊடாக வழங்கப்படுகின்ற தகவல்களுக்கு அமைய குறித்த நோயாளர்களின் வீடுகளுக்கே மருந்துகள் விநியோகிக்கப்படும்.

தற்போது நோயாளர்களுக்கு மருந்துகள் விநியோகிக்கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சிங்கள மொழியில் 0720720720 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும், தமிழ் மொழியில் 0720 60 60 60 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற வைத்தியர் சம்பிக்கா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது, ​​சுகாதார அமைச்சும் தபால் திணைக்களமும் இணைந்து இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருந்ததமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.