சாணக்கிய தலைவர்களே வருங்கால எம் சமூகத்தை நாட்டில் வாழவிடுங்கள்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சாணக்கிய தலைவர்களே வருங்கால எம் சமூகத்தை நாட்டில் வாழவிடுங்கள்!!!

இலங்கையின் அரசியலை பொருத்தவரை ஆரம்ப காலந்தொடக்கம் இந்த நாட்டில் பல்வேறுபட்ட சமூக மக்களுடன் ஒன்றிணைந்து அரசியல் விடயங்களில், தேசிய அரசியலில் கலந்து, அரசியல் செய்யும் ஒற்றுமையான ஒரு வழி முறையே காணப்பட்டது.

நம் நாட்டைப் பொறுத்தவரையில், பல்வேறுபட்ட பல்லின மக்கள் வாழும் ஒரு நாடு என்ற வகையில், அவ்வப்போது சிறு சிறு கலவரங்கள் ஏற்படவே செய்தது, இருந்தாலும் இந்த நாட்டைப் பொறுத்தவரை முஸ்லிம்களுக்கு என, தனியான அரசியல் கட்சி அமைத்து, உரிமைகளுக்காக போராட வேண்டிய எந்தத் தேவையும் இந்த நாட்டில் இருக்கவில்லை.

ஆனால் அவ்வப்போது ஏற்பட்ட சிறு சிறு சம்பவங்களையும் கலவரங்களையும் மையமாகக்கொண்டு தலைவர் அஷ்ரப் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை ஆரம்பித்தார்.

இது அவர் செய்த ஒரு பெரும் வரலாற்றுத் தவறாகும். இதை அப்போது இருந்த அரசியல் ஞானிகளான, பாக்கீர் மாக்கார் A C S ஹமீத் உட்பட பல அரசியல் முக்கியஸ்தர்களும் அரசியல் ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டி இருந்தனர்.

இருந்தாலும் தலைவர் அஷ்ரப் அவர்கள் அவ்வேளையில் தன்னிச்சையாக செயல்பட்டதால் இன்று அரசியலில் முஸ்லிம்களுக்கான இந்த அவல நிலை ஏற்பட்டது.

இது ஒரு வரலாற்றுத் தவறாகும் என்பதை பின்னர் உணர்ந்த அவர், தன்னால் ஏற்பட்ட வரலாற்று தவறை நிவர்த்தி செய்வதற்காக நூஹா எனும் கட்சியை ஆரம்பித்தார். இதன் மூலமாக மாற்று இன மக்களையும் ஒன்று சேர்த்து அரசியல் பயணத்தை தொடர முற்பட்டபோது அவரின் வாழ்க்கைப் பயணம் முற்றுப்பெற்றது.

ஆனால் அன்று எமது அரசியல் ஞானிகள், அரசியல் அவதானிகள், அரசியல் தீர்க்கதரிசனம் சொன்னது போன்று, இன்று தனிக் கட்சியானது சுயநலம் கொண்ட, சமூக பற்றற்ற, சுயநலவாதிகளின் கையில் சென்றடைந்துள்ளதது. இதுவே இன்றைய முஸ்லிம்களின் அரசியலின் அவல நிலைக்கான முக்கிய காரணமாகும்.

முஸ்லிம்களின் தனித்துவம், தனியுரிமை என்ற தடியை ஏந்தியவர்கள், முஸ்லிம்களின் உரிமைகளை விற்றுப் பிழைக்கும் ஒரு சமூக துரோகிகளாக மாறிவிட்டனர்.

காலத்துக்கு காலம் சட்டத் திருத்தம், அரசியல் யாப்பு திருத்தம், என முஸ்லிம்களின் உரிமைகளை அவ்வப்போது உள்ள அரசாங்கங்கள் பறிக்கும்போது , இவர்கள் இன்னோரன்ன சலுகைகளுக்காகவும், பதவிகளுக்காகவும் முஸ்லிம்களின் உரிமைகளை தாரை வார்க்கத் தலைப்பட்டனர்.

இதில் ஒரு பகுதியான ஓரங்க நாடகம் 20ஆம் திருத்தச் சட்டத்தில் நடிக்கப்பட்டது.

மாநாடு கூடி திருத்தச் சட்டமூலத்திற்கு வாக்களிக்க திட்டங்கள் தீட்டப்பட்டு, ஏற்பாடுகள் செய்துவிட்டு முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி துரோகத்தை இழைத்தனர்.

முஸ்லிம் சமூகத்தின் பாதுகாவலர்கள் என்ற வேடத்தில் நடிக்கும் இவர்கள், இந்த விடயத்தில் சகல ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து விட்டு, சமூகத்தின் மத்தியில் வந்து பல்வேறு பொய்களை மக்களிடம் அள்ளி வீசினார்கள்.

கட்சியின் தீர்மானத்திற்கு மாறாக செயல்பட்டனர்.

தலைமைத்துவத்தின் கட்டளையை மீறிவிட்டார்கள்.

இவர்களுக்கு எதிரான ஒழுகாற்று நடவடிக்கை.

கட்சியை விட்டு இவர்களை விலக்கப் போகின்றோம் என, மக்களிடம்

பல்வேறுபட்ட பொய்களை அல்லிக் கொட்டினார்கள்.

இதில் இவர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல்களில், பதவி பரிமாற்றங்களில், பதவிகளில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, உண்மை வெளிப்பட்டது.

இதைத் தொடர்ந்து மீண்டும் மக்களை ஏமாற்றும் ஒரு நாடகமாக, கட்சி மன்னிப்பு வழங்கி விட்டது என்ன, சமூகத்தில் இருந்தும், மக்களிடமிருந்தும், தப்புவதற்கான ஒரு வழி முறையை மீண்டும் கை கொண்டுள்ளனர்.

முஸ்லிம் சமூகத்திற்கு செய்த துரோகத்திற்கு கட்சி எவ்வாறு மன்னிப்பு வழங்க முடியும்.

இவ்வாறு தூரோகம் செய்த சமூக துரோகிகளுக்கு கட்சி மன்னிப்பு வழங்க இவர்களுக்கு என்ன உறிமை இருக்கின்றது.

இவர்கள் சமூகத்திற்குச் செய்த திருட்டுத்தனமான, வரலாற்று துரோகத்திற்கு இவர்களுக்கு எ‌வ்வாறு மன்னிப்பு வழங்க முடியும்.

இவர்களின் இவ்வாறான போக்கிலிருந்து இதன் பின்னணி என்பது தெளிவாகியது.

இவ்வாறு இவர்கள் துரோகத்தனமாக மாறி வார்தைகளையும், வாக்குறுதிகளையும், வழங்கி வருவதன் மூலம் முஸ்லிம் சமூகம் ஒரு மாறுபாடு செய்யும், ஏமாற்றும் சமூகம் என்று, மற்ற சமூகத்தின் மத்தியில் முத்திரை குத்தப்படுவதை திறுத்தி, சாணக்கியத் தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றுவதில் தம் சாணக்கியத்தை காட்டாமல் வருங்கால முஸ்லிம் சமூகத்தை மதிப்புடனும் மறியாதையுடனும் இந்த நாட்டில் வாழ வழிவிட வேண்டும். தமது அரசியல் லாபத்திற்காக வருங்கால சந்ததியை பலி கொடுக்கும் தங்களது கேவலமான அரசியலை இவர்கள் சமூக நலன் கருதியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவர்கள் செய்தது சமூகத்திற்கான பாரதூரமான வரலாற்றுத் துரோகம். இவர்கள் சமூகத்தின் துரோகிகள் என முஸ்லிம் அரசியலில் அடையாளப்படுத்தப்பட வேண்டியவர்கள். முத்திரை குத்தப்பட்ட படவேண்டியவர்கள். இதை நம் சமூகம் இதன் பிற்பாடாவது இந்த சமூகம் விளங்கவில்லை என்றால், இந்த நாட்டில் இருந்து முஸ்லிம்களை விரட்டிய அடிப்பதற்கும் இவர்கள் கை தூக்குவதற்கும் பின்வாங்க மாட்டர்கள் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை.

முஸ்லிம் சமூகம் இந்த நாட்டின் நிம்மதியாக வாழ வேண்டுமாக இருந்தால் இவ்வாறன முஸ்லிம் சந்தர்ப்பவாத துரோக காட்சிகள் இல்லாது ஒழிக்கப்பட்ட வேண்டும்.

மதத்தையும் இனத்தையும் பிரதிநிதப்படுத்தும் வகையிலான முஸ்லிம் அரசியல் கட்சிகள் முதலில் ஒழிக்கப்பட்ட வேண்டும்.

காலத்திற்குக் காலம் மேடைகளில் இனவாதத்திற்கு எதிராக வீராவேஷம் பேசி, மக்களை ஏமாற்றி, முஸ்லிம் மக்களின் வாக்குகளை கொள்ளையிட்டு, பி்ன்னர் இனவாதிகளுடன் கைகோர்த்து அரசியல் நடத்தும் திருட்டு அரசியலுக்கு முஸ்லிம் சமூகம் முதலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தனித்துவம் என்ற பெயரில் என்று இவர்கள் அரசியல் நடத்த ஆரம்பித்தார்களோ, அன்றே இந்த நாட்டு முஸ்லிம்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு இவர்கள் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் என்பதே உண்மை.

அன்று எமது அரசியல் ஞானிகள் என்ன அரசியல் தீர்க்கதரிசனம் கூறினார்களோ அதுவே இன்று நடந்தேறிக் கொண்டிருக்கின்றது.

கடந்த தேர்தல் காலங்களில் தற்போதைய அரசாங்கத்தின் மீ்து இவர்கள் உரத்துக் கூறிய இனவாத கருத்துக்களும், குற்றச் சாட்டுக்களும் நம் காதுகளில் இன்னும் ஒலிக்கின்றன.

இவர்கள் அரசியல் மேடைகளில் தற்போது ஆட்சியில் உள்ள அரசை விமர்சித்த விதம் மக்கள் இன்னும் மறக்கவில்லை.

இலங்கையில் நிலவும் இனவாதத்தை மறு முனையில் இருந்து இதை காரணங்காட்டி, தங்களது அரசியலை நடாத்துவது தெளிவாகத்த தெரிகிறது.

ஆக இனவாதம் இவர்களினதும் அரசியல் மூலதனம் என்பதை தெளிவாக உணர முடிகின்றது.

கடந்த காலங்களில் இனவாதிகளின் இனவாதத்தை விமர்சித்தே இவர்கள் மக்களிடம் வாக்குக் கேட்டார்கள். ஆக நாட்டில் இனவாதம் இல்லை என்றால் இவர்களது அரசியலும் இல்லை என்பதே உண்மை.

மாறாக சமுகத்திற்கு செய்த சேவைகளையோ பெற்றுத்தந்த உரிமைகளையோ மக்கள் முன் நிலையில் வைத்து மக்களிடம் வாக்கு கேற்கும் அளவில் இவர்கள் மக்களுக்கோ சமூகத்திற்கோ எந்த விதமான சேவைகளையோ, உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க வில்லை என்பதே உண்மை எனவே மக்கள் வருங்காலத்தில் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ வேண்டுமாக இருந்தால், இந்த சந்தர்ப்பவாத, துரோகத்தனமான, திருட்டு அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும். முஸ்லிம் சமூகம் கறிவேப்பிலைகளாக பயண்படுத்தப்படுவதை தவிர்த்து அரம்ப கால அரசியலை முஸ்லிம் மக்கள் பின் தொடர வேண்டு்ம். மாறாக முஸ்லிம் தனியுரிமை கட்சிகள் என முஸ்லிம் மக்கள் இவர்களை ஆதரிப்பதை பல முறை சிந்திக்க வேண்டும்.

முஸ்லிம் மக்கள் தேசிய, பெரும்பான்மை கட்சிகளை ஆதரித்து தமது அரசியலை மேற்கொள்வேண்டும். முஸ்லிம் சமூகத்திற்கு எந்தத் பகுதியி்ல் இருந்து சாதகமான பதிலும் நன்மையும் கிடைக்கின்றதோ, அக்கட்சியை ஆதரித்து முஸ்லிம்கள் தமது உறிமை களையும் சேவைகளையும் பெற்றுக்கொள்ள தலைப்படவேண்டும்.

அவ்வாறான போது தத்தமது அரசியல் நலனுக்காகாவும் அரசில் ஸ்தீரத்திற்காகவும் முஸ்லிம் சமூகத்தை பாதிக்காத முறையில் தேசிய கட்சிகள் வைத்திருக்க தலைப்படுவார்கள் என்பதை உண்மை.

தற்போதுள்ள அரசியல் முறையில், இனவாத்தை கையில் எடுத்தது, பெரும் பான்மை மக்களை திருப்திப்படுத்துவதற்காக, சிறுபான்மை மீது அடாவடித்தனங்களை மேற்கொள்வதும், தேர்தல்கள்

நிறைவு பெற்றவுடன், முஸ்லிம் கட்சிகளை பதவிக்கும் பணத்திற்கும் கொள்வனவு செய்து, தத்தமது ஆட்சி அதிகாரங்களை நிலைப்படுத்திக் கொள்ளும்

கேவலமான அரசியல் வழி முறைக்கு முற்றுப் புள்ளி வைக்க முஸ்லிம்கள்  தலைப்பட வேண்டும்.

எனவே ஐக்கிய தேசிய கட்சியின் சந்தர்பம் பார்த்து, கைமாற்றும் அரசியல் வழிமுறைக்கு மக்கள் எ‌வ்வாறு முற்றுப்புள்ளி வைத்தார்களோ, அதே பாடத்தை முஸ்லிம் சமூகம்

வருங்காலங்களில் சந்தர்ப்பவாத அரசியலுக்கு, முஸ்லிம் சமூகம் பாடம் புகட்ட வேண்டும்.

தவறும் பட்சத்தில் இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் நிலையை, நம் முஸ்லிம் துரோக அரசியல் வாதிகளே பணத்திற்காகவும் பதவிக்காகவும் சந்தர்ப்பமாக பயன்படுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

சிந்திப்போம் செயல்படுவோம். 

-பேருவளை ஹில்மி

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.