
இதற்கமைவாக பஸ் மற்றும் ரயில் சேவைகளில் சுமார் 75 வீதம் நாளை முதல் செயல்படும்.
நாளாந்தம் தொழிலுக்காக செல்லும் பயணிகளுக்காக பஸ் மற்றும் ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதுடன் இடைப்பட்ட காலப்பகுதியில் பொதுவான போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது.
பாரிய அனர்த்த நிலைக்கு மத்தியில் பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் போது கொவிட் 19 தொற்றில் தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு பயணிகள் சுகாதார பாதுகாப்பு விதி முறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்0
சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக இந்த போக்குவரத்துச் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி, இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிகள் பயணிக்க முடியும். அதற்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .