
இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவர்களை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை இரத்துச் செய்தல், சம்பள முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி அதிபர்கள் - ஆசிரியர்கள் வாகனப் பேரணியூடாக வந்து ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய 16 பெண்கள் உட்பட 44 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு நேற்று ரெப்பிட் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. எனினும், அவர்களில் எவருக்கும் கோவிட் தொற்று உறுதியாகவில்லை.
அத்துடன், அவர்களிடம் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்களை இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.