“கொவிடற்ற பேருவளை நகரம்” - திட்டத்தில் 19,000 பேருக்கு தடுப்பூசி

“கொவிடற்ற பேருவளை நகரம்” - திட்டத்தில் 19,000 பேருக்கு தடுப்பூசி

பேருவளைத் தொகுதியில் பல பிரதேசங்களிலும் கொரோனா தடுப்பூசி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில்  பொதுஜன பெரமுன
பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீலின் எண்ணக்கருவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள   "கோவிடற்ற பேருவளை நகரம்" எனும் திட்டத்தின்  கீழ்  கடந்த 09 தினங்களாக பேருவளை டீ.எஸ். சேனாநாயக்க தேசிய பாடசாலையில் இடம்பெற்ற கொவிட் தடுப்பூசி வழங்கும் நிகழ்வில் சுமார் 19,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றதாக நிகழ்ச்சி  ஒருங்கிணைப்பாளர் மபாஸ் மஷ்ஹூர்  தெரிவித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீலின் நேரடி  ஆலோசனை, வழிகாட்டலில்   ஆரம்பிக்கப்பட்ட இந்த தடுப்பூசி நிகழ்வில் பேருவளை சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வதியும் சிங்கள, முஸ்லிம், தமிழ் 
 இனத்தவர்கள் அதிகமானோர் ஆவலுடன்  இதில் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

இப்பிரதேசங்களைச்சேர்ந்த சுமார் 15,000 பேர் முதல் டோஸையும் 4000 பேர் இரண்டாவது டோஸையும் இப்பாடசாலையில் பெற்றுக்கொண்டனர்.

மேலும் இப்பிரதேசத்தைச் சேர்ந்த விசேட தேவையுடையோர்கள், நோய்களுக்கு சிகிச்சை பெறுவோர், வயதானோர் விசேடமாக கலந்துகொண்டதோடு அவர்கள் விசேடமாக ஏற்பாட்டாளர்களினால்  கவனிக்கப்பட்டமையை அனைவரும் பாராட்டினர்.  மேலும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்த பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீலுக்கு கட்சி பேதமின்றி  அனைவரும் பாராட்டு தெரிவித்தனர். 

இதனை சிறப்பாக வழிநடாத்த இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்தவும் ஒத்தாசை வழங்கியதும்  குறிப்பிடத்தக்கது.
அதேபோல், பேருவளை பிரதேச த்தில் ஒரே தடுப்பூசி வழங்கும் நிலையமொன்றில் அதிகளவிலானோருக்கு தடுப்பூசி வழங்கிய நிலையமாக மேற்படி பாடசாலை  பதிவாகியுள்ளமை விசேட  அம்சமாகும். 

மேற்படி திட்டத்தை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கொரோனா தடுப்புக்கான தேசிய திட்டத்தின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, களுத்துறை மாவட்ட  அரசாங்க அதிபர் பிரசன்ன மற்றும் பொலிஸார்,  பேருவளை சுகாதார பிரிவினர், மருத்துவ அதிகாரிகள்,நகர சபை உறுப்பினர்கள்,  நலன்விரும்பிகள் அனைவருக்கும்  பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் நன்றி தெரிவித்துள்ளதாகவும் இணைப்பாளர் மபாஸ் மஷ்ஹூர் மேலும் தெரிவித்தார்.

தகவல் - மபாஸ் மஷ்ஹூர் 

Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.