ஊரடங்கு தளார்த்தப்பட்டால் கொரோனா இறப்புக்கள் 16,000 ஐ கடந்து செல்லும் - வெளியான அதிர்ச்சித் தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஊரடங்கு தளார்த்தப்பட்டால் கொரோனா இறப்புக்கள் 16,000 ஐ கடந்து செல்லும் - வெளியான அதிர்ச்சித் தகவல்!

எதிர்வரும் திங்களன்று (30) நாடு தழுவிய முடக்கத்தை படிப்படியாக தளர்த்துவதன் மூலம், நாட்டில் கொரோனா இறப்புக்களின் எண்ணிக்கை 16,700 வரை செல்லும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கணித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் ஆய்வின் அடிப்படையில் முடக்கத்தின் போது நாட்டின் பொருளாதார தாக்கத்தை US $ 1.1 பில்லியன் அல்லது GDP யில் 1.3% ஆக மட்டுப்படுத்தும் என்று தெரியவந்துள்ளதாக த மோர்னிங் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இம்முடக்கமானது செப்டம்பர் 18 வரை நீட்டிக்கப்பட்டால், நாட்டில் கொரோனா இறப்புக்களின் 13,712 ஆகவும் 1.67 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு வெளிப்படுத்தியுள்ளது.

இப்பொது முடக்கமானத ஒக்டோபர் 2 வரை நீட்டிக்கப்பட்டால் அது 2.2 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதோடு, மொத்த கொரோனா இறப்புக்களின் எண்ணிக்கையை 10,400 ஆக மட்டுப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் 26 ஆகஸ்ட் 2021 அன்று வெபினார் இல் கலந்து கொண்ட பல நிபுணர்களின் கணிப்பின் மூலமே மேல் குறிப்பிடபட்டவை வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு அல்லது கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாட்டை எடுத்துச் செல்வது வேறு வழியை அரசாங்கம் கருத்தில் கொள்ள முடியாது என இந்த கணிப்புகளின் அடிப்படையில் வெபினாரில் கலந்து கொண்ட பல நிபுணர்களின் கருத்தாகும்.

வேறு எந்த முடிவுகளும் நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் முற்றிலும் பேரழிவு தரும் என்பதை நிரூபிக்கும் என்றும், அதன் பிறகு பொருளாதார தாக்கமும் உணரப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

நாடு தழுவிய தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீட்டிக்குமா இல்லையா என்பது குறித்து அரசாங்கம் இன்று தனது முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.