கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்கள்!

கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்கள்!

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் 15 நபர்களும் முல்லைத்தீவு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னணி சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த துமிந்த நாகமுவ உட்பட 6 நபர்களும் கண்டி, பல்லேகலை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தை மீறி போராட்டங்களை நடத்தியதற்காக இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஜாமீனில் விடுவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு மாற்றப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, பல தொழிற்சங்கங்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட அனைவரையும விடுவிக்கக்கோரி போராட்டங்களை நடத்தின.

8 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் அதிகாரிகள் ஆர்வலர்களை விடுவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.