
நேற்று வெள்ளிக்கிழமை வாகன விபத்துக்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் பாதசாரிகள் மூவரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும், முச்சக்கரவண்டிகளில் பயணித்த இருவரும் உள்ளடங்குகின்றனர்.
பாதசாரிகள் மற்றும் சிறிய ரக வாகனங்களில் பயணிப்போர் விபத்துக்களால் உயிரிழக்கும் எண்ணிக்கையில் அதிகரிப்பை அவதானிக்க முடிகிறது. கவனயீனமாக வாகனம் செலுத்துகின்றமையே அண்மைக்காலமாக விபத்துக்கள் அதிகரிக்கக் காரணமாகவுள்ளது.
எனவே, இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு சகலரிடம் கேட்டுக் கொள்வதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.