கடனில் போய் கொண்டிருக்கும் அரச நிறுவன அதிகாரியொருவருக்கு பல கோடி ரூபாய் பெறுமதியுள்ள சொகுசு ப்ரடோ!

கடனில் போய் கொண்டிருக்கும் அரச நிறுவன அதிகாரியொருவருக்கு பல கோடி ரூபாய் பெறுமதியுள்ள சொகுசு ப்ரடோ!

அரசு அதிகார தலைவர் ஒருவருக்கு 8 கோடி ரூபா செலவில் சொகுசு வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த தொகையை செலுத்தி பயன்படுத்தப்பட்ட வாகனம் கொள்வனவு செய்வதற்கே திட்டம் என தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தால் வாகனங்கள் இறக்குமதி இடைநிறுத்தப்பட்ட காரணத்தினாலும், அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுவதில் உள்ள சிரமம் காரணமாகவும், இக்குறிப்பிட்ட தலைவருக்கான வாகனத்தை அந்த அதிகாரத்தின் கீழ் உள்ள ஒரு அரச நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளது.

இருப்பினும், நிறுவனத்தின் தலைவருக்காக 2014 ஆம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட ப்ராடோ ஜீப் வண்டியானது, இன்னும் நல்ல நிலையில் உள்ளதாக அறியப்படுகிறது.

8 கோடி ரூபாய் செலவிடத் தயாராக இருந்தாலும், வாகத்தை கொள்வனவு செய்ய நினைக்கும் அதிகார சபை பல பில்லியன் ரூபா கணக்கில் கடன்பட்டிருப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.