வீதியில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் வீழ்ந்த முச்சக்கர வண்டி - விபத்தில் சிக்கியோர் மாயம்!

வீதியில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் வீழ்ந்த முச்சக்கர வண்டி - விபத்தில் சிக்கியோர் மாயம்!

கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்குச சென்ற முச்சக்கர வண்டி வீதியில் இருந்து விலகி செங்குத்துப்பாதை ஒன்றில் கவிழ்ந்துள்ளது.

முச்சக்கர வண்டியில் இருந்தவர்கள் விபத்து குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யாமல் தப்பி ஓடிவிட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து இன்று (17) காலை ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை சென்க்லயார தோட பகுதியில் நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் மது போதையில் வாகனத்தை செலுத்தியுள்ளதாகவும், முச்சக்கர வண்டி பிரதான வீதியில் இருந்து செங்குத்துப்பாதையில் கவிழ்ந்ததாகவும் தலவாக்கலை பொலிசார் தெரிவித்துள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.